பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., மனைவிக்கும் கொரோனா

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

தஞ்சாவூர் : பேராவூரணி எம்.எல்.ஏ.,வை தொடர்ந்து, அவரது மனைவிக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், பேராவூரணி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,கோவிந்தராஜுக்கும், அவரது உதவியாளர் கணேசனுக்கும், நேற்று முன்தினம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.,வின், 62 வயது மனைவிக்கு, காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, எம்.எல்.ஏ.,வுடன் தொடர்பில் இருந்த, 40 பேருக்கும், நேற்று காலை, பேராவூரணி அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்யப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X