4 மணி நேரம்; 100 கேள்விகள்.. அத்வானியிடம் கோர்ட் கிடுக்குப்பிடி

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
LK Advani , Babri Case Hearing, Babri Case, பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி, வாக்குமூலம்

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியிடம் 4.5 மணி நேரம் விசாரணை நடந்தது. 100க்கு அதிகமான கேள்விகள் நீதிபதிகளால் கேட்கப்பட்டது.

உ.பி., மாநிலம் அயோத்தியில், 1992ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட, 32 பேருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, லக்னோவில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


latest tamil news



பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று(ஜூலை 24) ஆஜராகி, வாக்குமூலம் பதிவு செய்தார். அவரிடம் சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதிகள் சுமார் 4.5 மணி நேரம் விசாரணை நடத்தினர். காலை 11 மணி முதல் 3.30 மணி வரை, 100க்கும் அதிகமான கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர். அவர் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
28-ஜூலை-202014:07:25 IST Report Abuse
Rafi கோவில் இல்லை என்று ஆதாரப்பூர்வமமாக நீதி மன்றம் அறிவித்து விட்டு, இடத்தை கோவில் கட்ட வழங்கிய போதே நீதிபதிக்கு சன்மானம் விரைவாக கிடைத்ததையும் உலகம் கண்டு வியந்தது. இந்த வழக்கில் பள்ளிவாசலை இடித்தது சட்ட விரோதம் என்று நீதிபதி குறிப்பிட்டிருந்ததும், இடித்ததை சில தலைவர்கள் பெருமையாக பேசியதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்து கொள்ளுமா, அல்லது ஏதாவது அடையாளம் தெரியாத அடிமட்ட தொண்டர்களுக்கு பெயருக்காக தண்டனை கொடுத்து விட்டு நீதிமன்றம் ஒதுங்கி கொள்ளுமா என்பதை பார்ப்போம்.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
25-ஜூலை-202014:47:34 IST Report Abuse
Raj தற்போது மத்தியில் பதவியில் இருப்பவர்களுக்கும் இதே நிலை வரும் விரைவில்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
25-ஜூலை-202013:07:18 IST Report Abuse
Ramesh Sargam 100 கேள்வியா? இவர் வயதை முன்வைத்து, கேள்விகள் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X