4 மணி நேரம்; 100 கேள்விகள்.. அத்வானியிடம் கோர்ட் கிடுக்குப்பிடி| Dinamalar

4 மணி நேரம்; 100 கேள்விகள்.. அத்வானியிடம் கோர்ட் கிடுக்குப்பிடி

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (20)
Share
LK Advani , Babri Case Hearing, Babri Case, பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி, வாக்குமூலம்

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியிடம் 4.5 மணி நேரம் விசாரணை நடந்தது. 100க்கு அதிகமான கேள்விகள் நீதிபதிகளால் கேட்கப்பட்டது.

உ.பி., மாநிலம் அயோத்தியில், 1992ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட, 32 பேருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, லக்னோவில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


latest tamil news



பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று(ஜூலை 24) ஆஜராகி, வாக்குமூலம் பதிவு செய்தார். அவரிடம் சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதிகள் சுமார் 4.5 மணி நேரம் விசாரணை நடத்தினர். காலை 11 மணி முதல் 3.30 மணி வரை, 100க்கும் அதிகமான கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர். அவர் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X