அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய மா.செ.,க்கள் பட்டியல்...

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அ.தி.மு.க.,வில், அமைப்பு ரீதியாக, மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்ட செயலர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஒப்புதல் அளிக்காததால், பட்டியல் வெளியாவதில் இழுபறி நீடிக்கிறது.சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், அ.தி.மு.க.,வில் தற்போது உள்ள, 55 மாவட்ட செயலர்களில், செயல்படாத மாவட்ட செயலர்களை மாற்றவும், புதிதாக பிரிக்கப்பட்ட, வருவாய் மாவட்டங்களுக்கு, புதியவர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலரை நியமிக்கவும், அக்கட்சி தலைமை முடிவு செய்து உள்ளது. அதேபோல, 30 - 40 ஊராட்சிகள் அடங்கிய ஒன்றியங்களை, இரண்டாக பிரித்து, புதிய நிர்வாகிகள் நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

ஐவர் குழுவினர்சேலம், தஞ்சாவூர் உட்பட, 7 - 8 மாவட்டங்களுக்கு, புதிய ஒன்றிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்ட செயலர்கள் பட்டியலை தயார் செய்வதற்குரிய ஆரம்பகட்ட பேச்சு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஐவர் குழுவினர் தலைமையில் நடந்தது.முதல் கூட்டத்தில், முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான இ.பி.எஸ்., துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கவில்லை. ஐவர் குழுவினர் மட்டும் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்டங்களை பிரிப்பது, சட்டசபை தொகுதிகளை பிரிப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இரண்டாவது ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்த நிலையில், அமைச்சர் தங்கமணிக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டதால், அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.எனினும், போனில் ஆலோசனை நடத்தி, மாவட்ட செயலர்கள் பட்டியலை தயார் செய்துள்ளனர். அந்த பட்டியலில், முதல்வர் இ.பி.எஸ்., ஆதரவாளர்களே, அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். இதனால், துணை முதல்வர் பன்னீர்செல்வம், கடும் அதிருப்தி அடைந்துள்ளார். பட்டியலுடன் தன்னை சந்தித்த, அமைச்சர் வேலுமணியிடம், சில மாவட்டங்களுக்கு, தன் ஆதரவாளர்களை நியமிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளார். ஏற்க மறுப்புஇதனால், இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

முதல்வர் தரப்பினர் தயாரித்த பட்டியலை, பன்னீர்செல்வம் ஏற்க மறுத்து விட்டார். அடுத்த மாதம் முதல் வாரத்தில், மீண்டும் ஐவர் குழு கூட முடிவு செய்து உள்ளது. இக்கூட்டத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆதரவாளர்களுக்கு, சம வாய்ப்பு அளித்து பட்டியல் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X