பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை மேலும் ரூ.76.50 கோடி ஒதுக்கீடு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், கொரோனா தடுப்புநடவடிக்கைகளுக்காக, கூடுதலாக, 76.50 கோடி ரூபாயை, முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர், விஜய பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் குழாய்கள் அமைப்பதற்கு, ஏற்கனவே, 75.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா தடுப்பு மேலாண்மை பணிக்களுக்காக, கூடுதலாக, 76.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிதி, பொது சுகாதாரத் துறையால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மருத்துவ ஊரக சேவை துறையால், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளில், ஆக்சிஜன் வசதியை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், மருத்துவமனை கட்டடங்கள் மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும்.மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி வாயிலாக, உயர் வெற்றிட வெளியேற்ற அமைப்பை நிறுவவும், ஆக்சிஜன் தொட்டிகளை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படும்.உயர் வெற்றிட வெளியேற்ற அமைப்பு, மருத்துவமனைகளில் நுண் கிருமிகளை நீக்கி, துாய்மையான காற்றோட்ட வசதியை மேம்படுத்த உதவுகிறது.

பொதுவாக, ஆக்சிஜன் வாயு நிலையில், சிலிண்டர்களில் சேமித்து வைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும்.ஆனால், ஆக்சிஜன் தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும், ஒவ்வொரு கிலோ லிட்டர் திரவ நிலை ஆக்சிஜன், 835 கியூபிக் மீட்டர் வாயு நிலைக்கு மாறக்கூடிய தன்மை வாய்ந்தது. இதனால், எவ்வித தங்கு தடையுமின்றி, தேவைப்படும் அளவிற்கு, கொரோனா நோயாளிகளுக்கு, ஆக்சிஜன் வழங்கி, விலை மதிப்பற்ற உயிர்கள் காக்கப்படுகின்றன.இதுபோன்ற, மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகளை, மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X