அரசியல் செய்தி

தமிழ்நாடு

அறக்கட்டளை சொத்து விவகாரம்; காங்., - பா.ஜ., மோதல் தொடர்கிறது

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (24)
Share
Advertisement
Congress, BJP, அறக்கட்டளை, சொத்து, காங்கிரஸ், பா.ஜ, மோதல்

சென்னை : காங்கிரஸ் அறக்கட்டளை சொத்து தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

சமீபத்தில், தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் உள்ள, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களில் முறைகேடு நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டை, முருகன் கிளப்பினார். அவருக்கு பதிலடி தரும் வகையில், அழகிரி, '30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பா.ஜ., அலுவலகமான கமலாலயம், சினிமா இயக்குனர் முக்தா சீனிவாசனிடமிருந்து, 3 கோடி ரூபாய்க்கு மிரட்டி வாங்கப்பட்டது' என்றார்.

இதற்கு பதிலளித்து, மறைந்த இயக்குனர் முக்தா சீனிவாசன் மகன் முக்தா சுந்தர் கூறியிருப்பதாவது: சென்னை, தி.நகரில் உள்ள, கமலாலயத்தை கஷ்டத்திற்கு விற்றதாகவும், மிரட்டப்பட்டதாகவும், அழகிரி பொய் சொல்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன் சந்தோஷமாக தான் விற்றோம்; அவர்களும் சந்தோஷமாக தான் வாங்கினர். சென்னை தி.நகரில், நான்கு கிரவுண்ட் நிலம், 30 கோடி ரூபாய்க்கு விலை போவதாக, அழகிரி கூறினார்.

தற்போது, 1 கிரவுண்ட், ஏழரை கோடி ரூபாய் என்கிறார். எங்கள் மீது அன்பு, பாசம் இருக்குமானால், எங்களிடம் இன்னும்,2 கிரவுண்ட் நிலம் உள்ளது. அதை, 15 கோடி ரூபாய்க்கு கொடுக்க நாங்கள் தயார்; அழகிரி வாங்க தயாரா? இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
25-ஜூலை-202021:16:28 IST Report Abuse
sankaseshan ஓரி போன்ற மங்கிகள் தங்கள் பெயர் வர வேண்டும் என்பதற்காக தினமும் ஏதாவது உணரவேண்டும்.
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் அடுத்தவர் கட்சியில் தலையீடு செய்யவேண்டும்.
Rate this:
Cancel
25-ஜூலை-202014:23:48 IST Report Abuse
நக்கல் தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றும் நேரம் வந்துவிட்டது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X