சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் கைதானவர் வீடு சூறை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை : மர சிற்ப கலைஞர் கடத்தி கொலை செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், உடலை கண்டுபிடிக்க முடியாததால், அவரது உறவினர்கள், குற்றவாளி வீட்டை சூறையாடி, மறியல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாள விடுதியைச் சேர்ந்த, மர சிற்ப கலைஞர் தவமணி, 50. இவரை, பணத்துக்காக, ஜூன், 18ல், அவரது உறவினர் கமல்ஹாசன், 45, உட்பட மூவர் கடத்திச் சென்று, கொலை செய்தனர். உடலை, கல்லணை கால்வாயில் வீசினர். கந்தவர்கோட்டை போலீசார், கமல்ஹாசன் உட்பட, மூவரை கைது செய்தனர். கல்லணை கால்வாயில் தேடியும் உடல் கிடைக்கவில்லை.ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் உடல் கிடைக்கவில்லை என்பதால், ஆத்திரமடைந்த தவமணியின் உறவினர்கள், நேற்று முன்தினம் இரவு, 10:௦௦ மணிக்கு, வெள்ளாள விடுதியில் உள்ள, கமல்ஹாசன் வீட்டை அடித்து நொறுக்கி, வீட்டில் இருந்த பொருட்களை தீ வைத்து எரித்தனர்.

பின், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை, டி.எஸ்.பி., கோபாலச்சந்திரன் பேச்சு நடத்தினார். தவமணி உடலை விரைவில் கண்டுபிடித்து தருவதாக உறுதி அளித்ததால், கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X