வைரஸ் உறுதியானவர்களுக்கு பதிவேடு பராமரிக்கப்படுகிறதா?| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வைரஸ் உறுதியானவர்களுக்கு பதிவேடு பராமரிக்கப்படுகிறதா?

Added : ஜூலை 24, 2020
Share
சென்னை : வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், எங்கு அழைத்து செல்லப் படுகின்றனர்; அனுமதிக்கப்படுகின்றனர் என்பதற்கான பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என்பதற்கு, அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஆதிகேசவன் என்பவர், சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின், அவர் காணாமல்

சென்னை : வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், எங்கு அழைத்து செல்லப் படுகின்றனர்; அனுமதிக்கப்படுகின்றனர் என்பதற்கான பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என்பதற்கு, அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஆதிகேசவன் என்பவர், சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின், அவர் காணாமல் போனார். தந்தையை கண்டுபிடித்து ஒப்படைக்கக் கோரி, அவரது மகன் துளசி தாஸ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'வைரஸ் தொற்று உள்ளவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து, மருத்துவ மனையில் சேர்ப்பதுடன், எங்கள் பணி முடிந்து விடுகிறது.

அதன்பின், சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில், அவர் இருப்பார்' என, கூறப்பட்டது.மேலும், காணாமல் போன ஆதிகேசவனை, மாநகராட்சியும் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டது. உடனே, 'மாநகராட்சி, சுகாதாரத் துறை இடையே ஒருங்கிணைப்பு உள்ளதா; வைரஸ் தொற்று உள்ளவர்கள் எங்கு அழைத்து செல்லப்படுகின்றனர்; எங்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பதை பதிவு செய்வதற்கான பதிவேடு பராமரிக்கப்படுகிறதா' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இரு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், பதிவேடுகளை தாக்கல் செய்வதாகவும், அனைத்து மருத்துவமனைகளிலும், ஆதிகேசவனை பற்றி விசாரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின், விசாரணையை, அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X