சென்னை : 'செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள்சரணாலயம் அருகில் இயங்கும், தனியார் நிறுவனவிரிவாக்கத்துக்கு, அனுமதி அளிக்கப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில், வெண்ணிலா என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே, 'சன் பார்மா' என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. 'அதை விரிவாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். விரிவாக்கத்துக்கு, தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், மத்திய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளிக்கவில்லை.
'அதனால், தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு, அனுமதி மறுக்கப்பட்டு விட்டது' என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையை, நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE