பொது செய்தி

தமிழ்நாடு

ஆகஸ்டு முதல் 'அட்மிஷன்'; அரசு பள்ளிகள் சுறுசுறுப்பு

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
August, Govt School, Admission, ஆகஸ்டு, அட்மிஷன், அரசு பள்ளிகள், சுறுசுறுப்பு

சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்ட மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி நேற்று முதல் மறுகூட்டலுக்கான பதிவுகள் துவங்கியுள்ளன. இன்று முதல் மாணவ மாணவியருக்கு பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது.

மாணவ - மாணவியர் தங்களின் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களில் மதிப்பெண் பட்டியலை வாங்கி கொள்ளலாம்.இந்நிலையில் ஆகஸ்டு முதல் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையை துவங்க தயாராக இருக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆக. 3ம் தேதிக்கு பின் மாணவர் சேர்க்கையை துவங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளதால் அரசின் உத்தரவுப்படி சேர்க்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

பட்டியல் வெளியானதும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை தொடரவும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
25-ஜூலை-202017:04:03 IST Report Abuse
S. Narayanan பீஸ் எல்லாம் வாங்கிய பிறகு கொரோனா வந்து விட்டது என்று சொல்லி அடுத்த வருடம் அட்ஜஸ்ட் பண்ண சொல்வர்.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
25-ஜூலை-202016:39:44 IST Report Abuse
R.Kumaresan R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு..R.Kumaresan. இந்தியா, தமிழ்நாடு பள்ளிக்கூடம், சில கல்லூரிகள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக சொல்லியிருக்கிறார்கள்..R.Kumaresan. இந்தியா, தமிழ்நாடு 12 ஏதோ மீதித்தேர்வு பள்ளிக்கல்வித்துறை ஏதோ சொல்லியிருக்கிறார்கள்..R.Kumaresan. வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு பள்ளிக்கூடங்கள், நிறைய கல்லூரிகளை எதுமாதிரி திறப்பார்கள் என்று தெரியவில்லை கிராமங்களில் குலதெய்வக்கோயில் மற்றும் சில கோயில்களில் கூட்டமாக்கக்கூடி சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தால் வைரஸ் நோய் பரவல் நிற்பதாகத்தெரியவில்லை..R.Kumaresan.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
25-ஜூலை-202010:13:39 IST Report Abuse
vbs manian கல்லூரிகளை திறக்கவே முடியாத சூழ்நிலை. மாணவர் சேர்க்கை துவங்கி என்ன செய்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X