அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., சிலை அவமதிப்பு; இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., கண்டனம்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
MGR Statue, EPS, OPS, எம்ஜிஆர் சிலை, அவமதிப்பு, இபிஎஸ்,ஓபிஎஸ், கண்டனம்

சென்னை : எம்.ஜி.ஆர்., சிலை அவமதிப்புக்கு, முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


முதல்வர்:


எம்.ஜி.ஆர்., சிலைக்கு, மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து, களங்கப்படுத்திய கொடுஞ்செயல், புதுச்சேரியில் நிகழ்ந்திருப்பது, மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.சமீப காலத்தில், சமூகத்திற்கு தொண்டாற்றிய, தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவது, களங்கப்படுத்துவது போன்ற இழிசெயல்கள், மிகுந்த வருத்தத்தை தருகின்றன.

உயரிய கொள்கை என்பது, நம் லட்சியங்களை, பிறர் ஏற்க பாடுபடுவது மட்டுமல்ல; மாற்று கருத்துக்களையும், குறிப்பாக மக்களின் நம்பிக்கைகளையும் மதிப்பதாகும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தரமற்ற விமர்சனங்களால், பிறர் மனங்களை காயப்படுத்துவது, மனித நாகரீகத்திற்கு மாறான செயல். எம்.ஜி.ஆர்., சிலைக்கு அவமரியாதை செய்த விஷமிகள் மீது, கடும் நடவடிக்கைகளை, புதுச்சேரி முதல்வர் எடுக்க வேண்டும்.


துணை முதல்வர் பன்னீர்செல்வம்:


தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவோர், யாராக இருந்தாலும், அவர்கள் மீது, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க, புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூலை-202005:32:36 IST Report Abuse
meenakshisundaram பிரம்மசரியம் ,இல்லறம் ,துறவறம் .வானப்பிரஸ்தம் இதுவே மனிதனின் வாழ்க்கை .காவி துணி ஒன்றும் கேவலமோ அல்லது இகழவோ அல்ல .வள்ளுவர் மேற்கொள் காட்டியதே .அவருக்கும் காவி அணிவதே மரியாதை செய்வதுதானே அன்றி இகழ்ச்சி அல்ல.இவர்கள் போற்றும் தருமயாதீனம் .பங்காரு அடிகள் ,குன்றக்குடி அடிகள் எல்லோரும் (நித்தியானந்தா கூட ) காவி அணிந்தவர்கள் தான்.-மஞ்சள் துண்டுக்கு காவி சற்றும் குறைந்தது அல்ல
Rate this:
Cancel
samvijayv - Chennai,இந்தியா
26-ஜூலை-202006:08:11 IST Report Abuse
samvijayv எங்களை என் வம்புக்கு இழுக்கிறீர்கள்., சொல்லத் தோணுகிறது. 'இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., கண்டனம்'.
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
25-ஜூலை-202021:56:07 IST Report Abuse
Sathyanarayanan Subramanian இந்த சஷ்டி கவசம் பற்றிய அவதூறு கண்டனம் தெரிவிக்காத இபிஸ், ஓபிஸ் எம் ஜி ஆர் சிலை காவி துண்டு போட்டதற்கு கூப்பாடு போடுவானேன். எம் ஜி ஆர் கூட ஸ்ரி முருகன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X