சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானலில் மீன் பிடித்து துாண்டிலில் சிக்கிய சூரி, விமல்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரியில் மீன் பிடித்த நடிகர்கள், விமல், சூரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பேரிஜம்ஏரியில், ஜூலை 17ல் சட்டவிரோதமாக நுழைந்து நடிகர்கள் விமல், சூரி ஆகியோர், திரைத்துறை பிரபலங்களுடன் மீன் பிடித்தனர். இந்த புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் வெளியானது.விமல், சூரிக்கு வனத்துறையினர் தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர். வனத்துறை சூழல் காவலர்கள், மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.சில மாதங்களுக்கு முன், பேரிஜம் ஏரியில் மீன் பிடித்த இளைஞர்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், நடிகர்களிடம், 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நடிகர்களுக்கு, காங்., முன்னாள், எம்.பி.,யின் வாரிசு ஒருவர் உதவி செய்துள்ளார். 'இ - பாஸ்' இன்றி சுற்றுலா நகருக்குள் அத்துமீறிய நடிகர்கள் மீது, ஊரடங்கு மீறல், நோய் தொற்று பரப்புவது போன்ற பிரிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இது குறித்து, ஆர்.டி.ஓ.,சிவகுமார் கூறுகையில், ''நடிகர்கள் வந்தது தொடர்பாக, வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி கேமரா பதிவு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நபர்கள் உதவியுடன் வந்துள்ளனர்.

தொடர் விசாரணைக்கு பின், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.டி.எஸ்.பி., ஆத்மநாதன் கூறுகையில், ''வனத்துறை மற்றும் நகராட்சி, வருவாய்த் துறையினர் விசாரிக்கின்றனர். அவர்கள் அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
25-ஜூலை-202015:37:17 IST Report Abuse
Baskar வீட்டிலிருந்து கேளம்பாக்கம் போன ரஜினியை வறுத்தெடுத்த பத்திரிக்கையாளர்கள் சூரி விமல் இருவரிடமும் காசு வாங்கி கொண்டு பலூனை பெரிதாக யூத மறந்து விட்டார்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X