ஆக., 3க்குப் பிறகு மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
cabinet, expansion, Modi, PM, india govt, union cabinet, மத்திய அமைச்சரவை, விரிவாக்கம், பிரதமர், மோடி

மத்திய அமைச்சர்கள் சிலரிடம், ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் இருப்பதால், அவர்களது வேலைப்பளு அதிகரித்து உள்ளது. அவர்களது வேலைப்பளுவை குறைக்கும் வகையிலும், புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாகவும், மத்திய அமைச்சரவை, ஆக., 3க்குப் பின் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பார்லிமென்ட் விதிகளின்படி, லோக்சபாவின் மொத்த பலத்தில், 15 சதவீதம் பேரை அமைச்சர்களாக நியமிக்க முடியும். அதன்படி, அதிகபட்சமாக, 81 அமைச்சர்கள், மத்திய அமைச்சரவையில் இடம் பெற முடியும். கடந்த, 2019, மே, 30ல், பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாம் முறையாக பதவியேற்ற போது, அவருடன் சேர்ந்து, 57 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுக் கொண்டனர்.

மோடியின் முதலாம் ஆட்சியில், அதிகபட்சமாக, 70 பேர் அமைச்சர்களாக இருந்தனர். பிரதமர் மோடி, அதே எண்ணிக்கையை, தற்போதைய ஆட்சியிலும் தொடர விரும்பினால், இன்னும் 13 பேரை, புதிதாக அமைச்சர்களாக ஆக்க வாய்ப்புள்ளது.


பங்களிப்பு:

அமைச்சர்களை தேர்வு செய்வது, பிரதமரின் தனிப்பட்ட உரிமை என்றாலும், பா.ஜ.,வைப் பொறுத்தவரை, கட்சியின் அமைப்புகளில் இருந்து அரசுக்கும், அரசிலிருந்து கட்சியின் அமைப்புக்கும், யார் யாரை மாற்றுவது என்பது குறித்து, முக்கிய ஆலோசனை நடத்தப்படும். அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே ஒருங்கிணைப்பாளராக செயல்படும் கிருஷ்ணகோபால், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பா.ஜ., அமைப்புச் செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகிய மூவரின் பங்களிப்பும் இருக்கும்.

இந்த மூவரும், இரண்டு வாரங்களுக்கு முன், பிரதமரை நேரில் சந்தித்தனர். அப்போதே, அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும், யாருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தருவது, தற்போதுள்ள அமைச்சர்களில், யாரை கட்சிப் பணிக்கு அனுப்பு வது என்பது குறித்தும் ஆலோசித்தனர். இந்த ஆலோசனையின் இறுதி வடிவம், ஜே.பி.நட்டா குழுவிடம் உள்ளது.

தற்போதைய கேபினட் அமைச்சர்களில் எட்டு பேரிடம், ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளன. தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்களிடம் கூட, அதிக இலாகாக்கள் உள்ளன. வேலைப்பளு அதிகமாக இருப்பதால், இந்த இலாகாக்களை பகிர்ந்தளிக்கும் விதமாக, பட்டியல் தயாராகி உள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நியமித்த பாணியில், உயர் பொறுப்புகளில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் சிலருக்கு, இம்முறை அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது.


வாய்ப்பு:

ராஜஸ்தானில், அசோக் கெலாட் அரசை கவிழ்க்கும் முயற்சியில், சறுக்கலை ஏற்படுத்திய கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு, அமைச்சரவையிலிருந்து விடை கொடுக்கப்படலாம். அடுத்து, ம.பி.,யில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற்றால் தான், ஆட்சியை தக்க வைக்க முடியும். இதன் காரணமாகவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதியின் படியும், ஜோதிராதித்ய சிந்தியா அமைச்சராக வாய்ப்புள்ளது.

வரும் நவம்பரில், பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், ஐக்கிய ஜனதாதள கட்சியினரும், அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அதேசமயம், அ.தி.மு.க., உட்பட தமிழக கட்சிகளுக்கான வாய்ப்பு குறித்து, உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.


பிரச்னை:

கடந்த, 2014ல், மோடி அமைச்சரவை பதவியேற்று, அடுத்த ஆறு மாதங்களில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. ஆனால், தற்போது ஓராண்டாகியும், விரிவாக்கம் நடைபெறாமல் இருப்பதற்கு, பா.ஜ.,வின் அமைப்பு தேர்தல்களும், அடுத்து வந்த கொரோனா பிரச்னையுமே காரணம்.

வட மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும், ஹிந்தி காலண்டரின்படி, ஜூலை 6 முதல், ஆகஸ்ட் 3 வரையிலான, 'சாவன்' என அழைக்கப்படும் மாதத்தில், எந்த புதிய காரியமும் செய்யமாட்டார்கள். எனவே, சாவன் மாதம் முடிந்தவுடன், ஆகஸ்ட் இரண்டாவது வாரம் வாக்கில், புதிய அமைச்சர்கள் பதவியேற்கக் கூடும். செப்டம்பர், 23க்குள், மழைக்கால கூட்டத்தொடர் துவங்கும் என்பதால், அதற்கு முன், அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
25-ஜூலை-202016:45:43 IST Report Abuse
Ellamman நிதி அமைச்சகத்துக்கு விமோச்சனம் கிடைக்குமா??? நாடு தாங்காது....செஞ்சோற்று கடன் தீர்க்க அம்மணிக்கு வேறு ஏதேனும் பார்த்து செய்யுங்க... எங்களை காப்பாத்துங்க...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
25-ஜூலை-202015:01:00 IST Report Abuse
Vijay D Ratnam தமிழகத்துக்கு ஒரு அமைச்சர் நிச்சயம். ஆளில்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பது போல ஓபிஎஸ் ரவீந்திரகுமாருக்கு ஒரு அமைச்சர் பதவி கன்ஃபார்ம். இனி திமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள் வாக்குகள் கிடைக்காது. அதேபோல கட்சியல்லாத ஹிந்துக்கள் வாக்கு இனி திமுகவுக்கு கிடைக்காது. ஏதாவது மானகெட்ட ஹிந்துக்கள் அரை சதவிகிதம் போட்டால் உண்டு. 2006 முதல் 2011 வரை ஐந்து ஆண்டுகள் கருணாநிதி முதல்வராக, அவரது மகன் என்ற ஒற்றை தகுதியோடு ஸ்டாலின் துணை முதல்வராக ஒரு மைனாரிட்டி அரசு நடத்தினார்களே, அதைவிட மிகச்சிறப்பான ஆட்சியை எடப்பாடி கே.பழனிசாமி வழங்குகிறார். அதனால் திமுகவுக்கு வாய்ப்பே இல்லை தி.க மாதிரி திமுக எக்ஸ்பைரி டேட் தாண்டிவிட்டது. இதற்குமேல் இருப்பது நாட்டுக்கு கேடு. மறுபடி அதிமுக பாஜக பாமக ரஜினி கூட்டணி அமைத்தால் அதோடு திமுகவை தடம்தெரியாமல் ஒழித்துக்கட்டிவிடுவார்கள்.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
25-ஜூலை-202016:43:39 IST Report Abuse
Ellammanஆசை ... தோசை.... அப்பளம்.... வடை....காக்கா சீ ஓடி போ........
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
25-ஜூலை-202014:25:12 IST Report Abuse
A.Gomathinayagam திறமையாளர்கள் சுதந்திரமாக தலையீடு இல்லாமல் பணிபுரியமுடியுமா கேள்விக்குறியே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X