அரசியல் செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணியாதோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் ; ராமதாஸ் வலியுறுத்தல்

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
 முக கவசம் அணியாதோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்  ;  ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை : 'முக கவசம் அணியாதோருக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தில், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை போல, தமிழகத்திலும் விதிக்கப்பட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:சென்னையில் இருந்து குறுக்கு வழிகளில், சொந்த ஊர்களுக்கு சென்ற பல ஆயிரம் பேர், தங்களை தனிமைப்படுத்த தவறியதால், பிற மாவட்டங்களில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.தமிழகத்தில், ௧௧௩ கொரோனா ஆய்வகங்கள் உள்ளன. அதில், ஆய்வு செய்ய விரும்பாதவர்களால், கொரோனாவை பரப்பி, சமுதாயத்திற்கு பெரும் கேடு இழைக்கின்றனர். கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் தீவிரப்படுத்த வேண்டும். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முக கவசம் அணியாதவர்களுக்கு, 1 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டதை போல, தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அரசு முன்வர வேண்டும் .இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samvijayv - Chennai,இந்தியா
26-ஜூலை-202006:14:13 IST Report Abuse
samvijayv பிறந்த நாள் வருகிற நேரத்தில்., இதுபோல் 'முக கவசம்' அணியாவிடில் கடும் தண்டனையை மக்கள் மீது திணிக்க அரசுக்கு பரிந்துரைக்கலாம்?.
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
25-ஜூலை-202022:52:51 IST Report Abuse
G.Kirubakaran ராமதாஸ் ஒரு மருத்துவர். தமிழக அரசு விதி முறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
25-ஜூலை-202022:40:09 IST Report Abuse
ராம.ராசு "ஒரு லட்சம் அபராதம் என்பது மிகவும் குறைவான தண்டனை. தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்." அரசியல் அதிகாரம் ஆளுமையில் இருந்துவிட்டால் பொது மக்கள் மீது எப்படிப்பட்ட அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டுவது இல்லை. சிறு பெண்களை கூட பாலியல் செய்து கொள்பவர்களுக்கு, சாமியார் என்ற போர்வையில் பெண்களை பாலியல் வன்முறை செய்பவர்களுக்கு, இயற்க்கை இயல்பில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் துள்ளத் துடிக்க சாதி ஆணவக் கொலைகளைச் செய்பவர்களுக்குக் கூட நீதிமன்றத்தில் மூலமாக, சட்டப்படியான தண்டனை என்ற முறை உள்ளது. ஆனால் முக கவசம் அணியாமல் சென்றால் உடனடியாக ஒரு லட்சம் அபராதமாம். ஊருக்கு இளைத்தவர்கள் பொதுமக்கள்தான்.... அது திரு.ராமதாசுக்கும் அப்படியே பொருந்தும். ஆளும் கட்சிக்கு ஆதரவு என்ற நிலையில் இந்த அபராதத்தை ஆதரித்து சொல்லுகிறார். இதே ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தால் இப்படியான அபராதத்திற்கு மிகக் கடுமையாக தனது எதிர்ப்பைக் காட்டி இருப்பார். உலக சுகாதார அமைப்பே சொல்லுகிறது ஊரடங்கு கொரோனாவைத் தடுப்பதற்க்கான தீர்வு அல்ல என்றும் தொடர்ந்து முக கவசம் அணிவதால் இயல்பான சுவாசம் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் உள்ளது. கொரோனா வைரசுக்கு தீர்வாக சித்தா ஹோமியோ மருத்துவத்த்தில் மருந்துண்டு என்பதும் அதை அந்த மருத்துவத்தில் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதும் செய்திகளில் வருவது... மக்களிடத்தில் வரவேற்பும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. அலோபதி மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிப்பு, தடுப்பூசி என்றெல்லாம் காலம் தாழ்த்துவதை விட நமது கலாச்சாரத்தில் உள்ள, தாயாராக கிடைக்கின்ற சித்தா, ஹோமியோ மருத்துவத்தை மிக அதிக அளவில் மக்களுக்கு கிடைக்கச் செய்வதின் மூலமாக கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பது அந்த மருத்துவர்களின் வேண்டுகோள் மட்டுமல்ல, அந்த மருத்துவத்தை எடுத்துக்கொண்ட அத்தனை பெரும் குணம் அடைந்துவிட்டார்கள், குணமடைந்து வருகிறார்கள் என்பது உண்மைச் செய்தியாக வந்துகொண்டு இருக்கிறது. அதற்காக இவரைப் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தால் கண்டிப்பாக சித்த, ஹோமியோ மருத்துவத்தில் கொரொனோ வைரஸ் இல்லாமல் செய்துவிட முடியும்... குறைந்தபட்சம் தமிழ் நாட்டு அளவில்லாவது. கூடவே நமது பாரம்பரிய, சித்த மருத்துவத்தின் உன்னததத்தை உலகறியச் செயய்திடமுடியும். அதைவிட்டு மேலும் மேலும் மக்களைக் கட்டுப்படுத்தும் நிலையில் வைத்து இருப்பது, அவர்கள் மிகப் பெரிய அளவில் மன அழுத்ததிற்க்கே இட்டுசெல்லும். மக்களாட்சி நாடு. மக்கள் சுதந்திரமாக சுவாசிக்க வேண்டும். இயல்பான வாழ்க்கை வாழ்க்கை வாழவேண்டும். "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு." - மக்களுக்கும் அப்படியான சிந்தித்து செயல்படும் நிலையைப் பெறுவதற்கு இவரைப் போன்ற அரசியல் தலைவர்களும், ஆளும் அரசும் வழி வகை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X