பொது செய்தி

தமிழ்நாடு

'பொய் செய்தி போட்டால் வழக்கு போடுவேன்'

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : 'உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டால் வழக்கு தொடர்வேன்' என, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவன தயாரிப்பாளர், ஞானவேல்ராஜா அறிக்கை:என்னைப்பற்றி சில தவறான செய்திகள் வெளிவந்தன; அதில், எந்த உண்மையும் இல்லை. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் வாயிலாக தயாரிக்கப்பட்ட, மகாமுனி படம் 2019 செப்., 6ல் வெளியானது. இதன் தமிழக ஏரியா வினியோக உரிமையை நீதிமணி என்பவர் 6.25 கோடி ரூபாய்க்கு, அவரது தருண் பிக்சர்ஸ் வாயிலாக ஒப்பந்தம் செய்து வாங்கினார். அதன்படி 2.30 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்தார். மீதி பணம் 3.95 கோடி ரூபாயை பின்னர் தருவதாக கூறினார். ஆனால், இன்று வரை பணம் தரவில்லை. இதற்காக சினிமா துறையின் சட்டதிட்டப்படி நடவடிக்கை எடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எந்த தொடர்பும் இல்லை : இந்நிலையில், நீதிமணியும், அவரின் கூட்டாளியும் 3 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, துளசி மணிகண்டன் என்பவர் புகார் அளித்துள்ளார். என் மீதோ, என் நிறுவனம் மீதோ எந்த புகாரும் தரப்படவில்லை. எனக்கும், நீதிமணிக்கும், மகாமுனி ஒப்பந்தம் தவிர, வேறு எந்த தொடர்பும் இல்லை. துளசி மணிகண்டன் அளித்த புகாரில், எந்த முகாந்திரமும் இல்லாமல், என்னையும், என் நிறுவனத்தையும் தொடர்புபடுத்தி, நான் மோசடி செய்து விட்டது போல செய்திகள் வெளிவந்துள்ளன. எதிர்மறையான தாக்கம்நான் 300 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தவறான செய்திகள் வெளியாகியுள்ளன.இதனால், நானும், என் குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

இதுபோன்ற செய்திகள், என் வியாபாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். என் தொடர்பான செய்திகளை, என் அனுமதி பெறாமல், யாரும் வெளியிட வேண்டாம். அவ்வாறு வெளியிட்டால், அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு போடுவதோடு, மான நஷ்டஈடு வழக்கும் தொடரப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
25-ஜூலை-202014:35:14 IST Report Abuse
Jayvee சினிமாத்துறையே ஒரு சாக்கடை அதில் இவன் மட்டும் எப்படி நல்லவனாக இருக்கமுடியும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X