கோர்ட் செய்தி

தமிழ்நாடு

காணொலி காட்சி வழியாக பதிவு பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சென்னை : சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், காணொலி காட்சி வழியாக, பார் கவுன்சிலில் பதிவு செய்யும் நிகழ்ச்சியை நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு, பார் கவுன்சில் பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை, காணொலி காட்சி வழியாக நடக்கிறது. வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக முடியாத நிலை உள்ளது. சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.இந்நிலையில், திருவாரூரை சேர்ந்த, ஹரிகிருஷ்ணன் என்பவர், தாக்கல் செய்த மனு:வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்கு, விண்ணப்பம் அளித்துள்ளேன்.

பார் கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே, வழக்கறிஞராக பணியாற்றுவதற்கான தகுதி தேர்வில் கலந்து கொள்ள முடியும்.தனி மனித இடைவெளி காரணமாக, ஒட்டுமொத்தமாக பதிவு செய்யும் நிகழ்ச்சியை நடத்த இயலாது.நீதிமன்றங்களில், வழக்கு விசாரணை, காணொலி காட்சி வழியாக நடக்கிறது.அதனால், காணொலி காட்சி வழியாக, வழக்கறிஞராக பதிவு செய்யும் நிகழ்ச்சியை நடத்தும் படி, பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. வழக்கில், இந்திய பார் கவுன்சிலை சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 27க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.மனுவுக்கு, பார் கவுன்சில் பதில் அளிக்கும் படியும் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X