பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பியது வீராணம் ஏரி நடப்பாண்டில் 2ம் முறை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement
 நிரம்பியது வீராணம் ஏரி நடப்பாண்டில் 2ம் முறை

காட்டுமன்னார்கோவில் : கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதில், இரண்டாவது முறையாக ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி கொள்ளளவு 47.50 அடி. ஜூன் மாதத்தில், வீராணம் ஏரியின் நீர் மட்டம் 40 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால், சென்னைக்கு அனுப்பும் குடிநீர் அளவும் குறைக்கப்பட்டது.இந்நிலையில், மேட்டூர் அணையில், ஜூன் 12ம் தேதியும், கல்லணையில் 16ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 500 கன அடி திறக்கப்பட்ட தண்ணீர், ஜூன் 21ல், கீழணை வந்தது.வீராணம் ஏரியை முதலில் நிரப்புவதற்காக, கீழணை நிரம்பாமலே, தண்ணீர் வந்த நாளில் இருந்தே, வடவாற்றில் திறக்கப்பட்டது.

இதனால், வீராணம் ஏரி வேகமாக நிரம்பியது. முழு கொள்ளளவான, 47.50 அடியை நேற்று நள்ளிரவு எட்டியது.ஏரி கரை மட்டத்தில் இருந்து 8.5 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது ஏரியில், 1,465 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. சென்னைக்கு 59 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது.வீராணம் ஏரி 2019ல் ஐந்து முறை நிரம்பியது. இந்த ஆண்டு ஜனவரி, 22ம் தேதி, முழு கொள்ளளவை எட்டியது. தற்போது, இரண்டாவது முறையாக நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X