பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான அனுமதி ; துணை முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
  கட்டுமான அனுமதி  ;  துணை முதல்வர்  பன்னீர்செல்வம் உத்தரவு

சென்னை : ''கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் பணிகளை, விரைந்து மேற்கொள்ள வேண்டும்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், மே, 15 முதல், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி கோரிய மற்றும் நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான கோப்புகள், அதிக அளவில் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக, சி.எம்.டி.ஏ., தலைவரும், துணை முதல்வருமான பன்னீர் செல்வத்தை சந்தித்து, கட்டுமான துறையினர் மனு அளித்தனர். இதையடுத்து, கட்டுமான திட்ட நிலவரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு, துணை முதல்வர் உத்தரவிட்டார்.

அந்த அறிக்கை அடிப்படையில், உயர் நிலை ஆய்வு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. வீட்டுவசதி துறை செயலர் ராஜேஷ் லக்கானி, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.அப்போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களின் நிலவரம், நில வகைப்பாடு மாற்றம் மற்றும் கட்டுமான திட்ட அனுமதி கோரிய கோப்புகளின் நிலவரம் குறித்து, துணை முதல்வர் கேட்டறிந்தார். பின், நிலுவை கோப்புகள் மீது, விரைவாக முடிவெடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X