கவர்னர் மாளிகையில் காங்., - எம்.எல்.ஏ.,கள் முற்றுகை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

ஜெய்ப்பூர் : 'ராஜஸ்தானில் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களான, 18 எம்.எல்.ஏ.,க்கள் மீது, தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது' என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், 'சட்டசபையை உடன் கூட்ட வேண்டும்' என, வலியுறுத்தி, கவர்னர் மாளிகையில், முதல்வர், கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சட்டசபையை கூட்ட, கவர்னர், மிஸ்ரா சம்மதித்தார். ராஜஸ்தானில் முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின், துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அவர், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேருடன், ஹரியானாவில் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.

இதையடுத்து, சச்சின் பைலட் உள்ளிட்ட, 19 பேரிடமும், தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு, சபாநாயகர், ஜோஷி, 'நோட்டீஸ்' அனுப்பினார். இதை எதிர்த்து, 19 பேரும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், சபாநாயகர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,' சச்சின் பைலட் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம். ஆனால், அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது' என, நேற்று முன்தினம் தெரிவித்தது. பிரச்னைஇந்நிலையில், 'சச்சின் பைலட் உள்ளிட்ட, 19 எம்.எல்.ஏ.,க்கள் மீது, சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது' என, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில், மத்திய அரசையும் சேர்க்க வேண்டும் என கூறி, சச்சில் பைலட்டின் கோரிக்கையையும், உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.தீர்ப்பு வெளியான பின், முதல்வர், அசோக் கெலாட் கூறியதாவது:ாஜஸ்தான் சட்டசபையை கூட்ட, அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். நாளை மறுநாள் முதல், சபை நடவடிக்கைகள் துவங்க வேண்டும். கொரோனா வைரஸ் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, விவாதிக்க வேண்டும். எனவே சட்டசபையை கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு கவர்னர், கல்ராஜ் மிஸ்ராவிடம், நேரிலும், தொலைபேசி வழியாகவும் கேட்டுக் கொண்டேன். சட்டசபையை கூட்டுவது பற்றி, நேற்று முன்தினம் இரவே உத்தரவு வரும் என, எதிர்பார்த்தேன். ஆனால், இப்போது வரை, எந்த தகவலும் இல்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.

யாருடைய நெருக்கடியால், சட்டசபையை கூட்ட, கவர்னர் தாமதப்படுத்துகிறார் என, தெரிய வில்லை .நம்பிக்கைஎங்களிடம் பெரும்பான்மை உள்ளது. சட்டசபை கூடும் போது, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்பர். அவர்களில் பலர் எங்களை ஆதரிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் ஆதரிக்கவில்லை என்றாலும், பெரும்பான்மை பலம் உள்ளது. இவ்வாறு, கெலாட் கூறினார். இதை தொடர்ந்து, கெலாட், தன் ஆதரவு எம்,எல்.ஏ.,க்களுடன், நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்றார். ராஜ்பவனுக்கு வெளியே எம்.எல்.ஏ.,க்கள் அணி வகுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்பின், கவர்னரை சந்திக்க, முதல்வர், கெலாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, சட்டசபையை உடன் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவர்னரிடம் கெலாட் வலியுறுத்தினார்.

இதையடுத்து, சட்டசபையை கூட்ட, கவர்னர் மிஸ்ரா சம்மதித்தார். இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என, முதல்வரிடம், கவர்னர் தெரிவித்தார். இதை தொடர்ந்து. ஐந்து மணி நேரத்துக்கு மேல் நீடித்த முற்றுகை போராட்டத்தை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கைவிட்டனர். பா.ஜ., - எம்.எல்.ஏ., வழக்குகடந்த, 2018ல், ராஜஸ்தான் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அப்போது, பகுஜன் சமாஜ் சார்பில், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். ஆறு எம்.எல்.ஏ.,க்களும், கடந்த ஆண்டு செப்டம்பரில், காங்கிரசில் இணைந்தனர். இவர்களை, காங்கிரஸ் எம்.எல்.ஏ,.,க்களாக சபாநாயகர் அங்கீகரித்தார். இதனால், காங்கிரசின் பலம், 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில், 107 ஆக உயர்ந்தது.'இவர்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களாக அங்கீகரிக்க கூடாது; கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், ஆறு பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, கோரி, சபாநாயகர், ஜோஷியிடம், பா.ஜ., - எம்.எல்.ஏ., மதன் திலாவார், மனு கொடுத்தார். ஆனால், மனுவை சபாநாயகர் தள்ளுபடி செய்தார்.இந்நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில், திலாவார் நேற்று தாக்கல் செய்த மனுவில், 'பகுஜன் சார்பில் வெற்றி பெற்ற, ஆறு எம்.எல்.ஏ.,க்களையும், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி, நான் கொடுத்த மனுவை, சபாநாயகர் ஏற்கவில்லை. ஆறு எம்.எல்.ஏ.,க்களையும், தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, கூறியுள்ளார்.இந்த மனு மீதான விசாரணை, நாளை மறுதினம் நடக்கிறது. பா.ஜ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்ராஜஸ்தான் மாநில காங்., தலைவர், கோவிந்த் சிங் கூறியதாவது:அசோக் கெலாட் அரசை கவிழ்க்க, பா.ஜ., சதி செய்துள்ளது. மத்திய அரசு, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, சட்டசபையை கூட்ட விடாமல், கவர்னரை தடுத்துள்ளது. கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்றது போல், ராஜஸ்தானிலும், காங்., ஆட்சியை கவிழ்த்து, நாம் ஆட்சி அமைக்கலாம் என, பா.ஜ.,வின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது.ஜனநாயகத்தை படுகொலை செய்யும் பா.ஜ.,வின் செயலை கண்டித்து, மாவட்ட, பா.,ஜ., தலைமை அலுவலகம் முன், காங்., தொண்டர்கள், 25ம் தேதி காலை, 11.00 மணிக்கு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X