கேரள சட்டசபை வரை நீண்ட என்.ஐ.ஏ., விசாரணை கண்காணிப்பு கேமரா பதிவுகள் கேட்டு கடிதம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திருவனந்தபுரம் : கேரள தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ., அதிகாரிகள், மே 1 முதல், ஜூலை 4 வரை, கேரள சட்டசபை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைத் தருமாறு, தலைமை செயலரிடம், நேற்று கடிதம் அளித்தனர்.

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு, மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து, 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. இந்த வழக்கில், திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரக முன்னாள் ஊழியர்கள், ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள முதல்வர், பினராயி விஜயனின் முதன்மை செயலரும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலருமான சிவசங்கரனுக்கு, குற்றவாளிகளுடன் நேரடி தொடர்பு இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரிடம், தீவிர விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், கேரள சட்டசபை வளாகத்துக்கு, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று வந்தனர். தலைமை செயலரை சந்தித்து, சட்டசபை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், கடந்த மே 1 முதல் ஜூலை 4 வரை பதிவான காட்சிகளை தருமாறு கேட்டு, கடிதம் அளித்தனர்.சட்டசபை வளாகத்தில், மொத்தம், 83 கேமராக்கள் இருப்பதாகவும், அதில், தலைமை செயலர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள, நான்கு கேமராக்கள், சமீபத்தில் மின்னல் தாக்கி, பழுதடைந்து விட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நான்கு கேமராக்களில் பதிவான காட்சிகள் மட்டும் கிடைக்காது என, அதிகாரிகள் தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.மேலும், முதல்வர் அலுவலகம் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் முதன்மை செயலர், சிவசங்கரனின் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தங்க கடத்தல் குற்றவாளிகளில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷ், சட்டசபை வளாகத்தில் உள்ள பலத்த பாதுகாப்புகளை மீறி, முதல்வர் அலுவலகம் வரை எளிதாக சென்று வர, அவருக்கு யாரோ உதவியதாக, என்.ஐ.ஏ.,வுக்கு தகவல் கிடைத்தது. அது யார் என்பதை அறிய, இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, ஸ்வப்னா சுரேசின் வங்கி லாக்கரில் இருந்து, 1 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ௧ கிலோ தங்கம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்வப்னாவின் கணவர் என் உறவினர் : சிவசங்கரன்'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரனிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று முன் தினம் விசாரணை நடத்தினர். அப்போது, குற்றவாளி ஸ்வப்னாவின் கணவர், தன் உறவினர் என்றும், தங்க கடத்தல் கும்பலுடன் அவருக்குள்ள தொடர்பு குறித்து, முன்பே தன்னால் அறிந்து கொள்ள முடியாமல் போனது, தனிப்பட்ட முறையில் தன் தோல்வி என்றும், சிவசங்கரன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் இருந்து, என்.ஐ.ஏ., -- டி.ஐ.ஜி., 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சிவசங்கரனிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார். அப்போது, தங்கக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிலரது புகைப்படங்களை காட்டி, அவர்களை ஸ்வப்னாவுடன் பார்த்துள்ளனரா என, கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.ரூ.40 கோடி பண மோசடிகுற்றவாளி ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்சில் பணியில் இருந்த போது, 40 கோடி ரூபாய் வரை துாதரக பணத்தை, மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, ஐக்கிய அரபு எமிரேட்சின், வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு, இரு முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2018, டிசம்பரில் வந்த புகாரை அடுத்து நடந்த தணிக்கையில், ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன் பிறகே, அவர் துாதரக பணியை இழந்திருக்க கூடும் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஸ்வப்னாவுடன், துாதரகத்தில் பணியாற்றிய சரித் குமார், விமான நிலையத்தில் இருந்து, கடத்தல் தங்கத்தை பெற்றுவரும் பணியை கவனித்து வந்தார். இதற்காக, துாதரகத்தின் போலி சீல் மற்றும் 'லெட்டர் ஹெட்' போன்றவற்றை தயார் செய்தது, விசாரணையில் உறுதியாகி உள்ளது.----------------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X