பொது செய்தி

இந்தியா

அண்டை நாட்டு நிறுவனங்களுக்கு வர்த்தகத்தில் புதிய கட்டுப்பாடு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுடில்லி : அண்டை நாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொள்ளும் வர்த்தகம் தொடர்பாக, புதிய விதிமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: எல்லையில் தொல்லை தரும் சீனா உடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலில், ஊரடங்கால் நலிந்த நிறுவனங்களை, சீன நிறுவனங்கள் கையகப் படுத்துவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகள், மத்திய அரசின் அனுமதியுடன் தான், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு பொருட்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை, வலைதள சந்தையில் சமர்ப்பிக்கும் நிறுவனங்கள், அவை எந்த நாட்டை சேர்ந்தவை என, குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அண்டை நாடுகள், மத்திய அரசு துறைகளுக்கு, சரக்கு மற்றும் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்த புள்ளியில் பங்கேற்கும் முன், அவை, மத்திய தொழில்துறையில் பதிவு செய்யும் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு பதிவு செய்யாத நிறுவனங்கள், மத்திய அரசின் ஒப்பந்த புள்ளிகளில் பங்கேற்க முடியாது.குறிப்பாக, சீன பொருட்கள் இறக்குமதியை குறைக்கவும், சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுக்கவும், அதேசமயம், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இத்தகைய புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, சீனாவிலிருந்து, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதனால், வேறு எந்த நாட்டையும் விட, சீனா உடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, 3.75 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு'அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்னணு வலைதள நிறுவனங்கள் விற்பனை செய்யும் பொருட்களில், அவை எந்த நாட்டில் தயாரிக்கப் பட்டவை என்பதை விளம்பரப்படுத்துமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, திவ்ய ஜோதி சிங் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, 'மின்னணு வலைதள நிறுவனங்கள் விற்கும் பொருட்களில், அவை தயாரிக்கப்பட்ட நாட்டின் பெயரை குறிப்பிடுவது தொடர்பாக கொள்கை விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X