பொது செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டி பகுதியில் அதிகரிக்கும் தொற்று சிறப்பு முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பண்ருட்டி; பண்ருட்டி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சிறப்பு முகாம்கள் நடத்தி பரிசோதனை செய்ய வேண்டும்.பண்ருட்டி தாலுகா பகுதியில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சி, பண்ருட்டி, அண்ணா கிராமம் ஒன்றிய பகுதியில் கடந்த 15 நாட்களாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை100க்கும் மேல் அதிகரித்துள்ளது. டாக்டர், ஓட்டல், மளிகை கடைக்காரர், பால்காரர், கட்சி பிரமுகர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.இதனை தடுத்திட பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சி, ஆரம்ப சுகாதார நிலையம் சார்பிலும், மருங்கூர், ஒறையூர், வீரபெருமாநல்லுார், பட்டாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முகாம்கள் நடத்தி கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும்.உடல் வெப்பம் அதிகரிப்பு, சளி போன்ற பிரச்னைக்கு மருத்துவமனை சென்றால் ஒன்றும் இல்லை என கூறி, மாத்திரைகளை கொடுத்து அனுப்புகின்றனர். அவர்கள் வேறு இடத்தில் பரிசோதனை செய்தால் கொரோனா உறுதியானதாக கூறுகின்றனர்.இதற்கு தீர்வாக, பண்ருட்டி தாலுகா பகுதியில் முகாம்கள் நடத்தி, கொரோனா பரவலை தடுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X