தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீ

Added : ஜூலை 25, 2020
Share
 தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தீ

தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று காலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

தேனி அருகே கண்டமனுார் விலக்கில் உள்ள மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவையொட்டிய அறையில் கிருமிநாசினி, ஆசிட், கெமிக்கல் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு மின்கசிவால் அறை தீப்பிடித்து புகை வெளியேறியது. அறை மேல் பகுதியில் உள்ள உள்நோயாளிகள், கொரோனா வார்டு நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும் அபாயம் இருந்தது. உடனே அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.ஆண்டிபட்டி, தேனி, போடி தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.

வீரர்கள் கருப்பசாமி 30, சுரேஷ், 28, விக்னேஷ்25 ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் கதிரா, உதவி அலுவலர் மணிகண்டன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கண்டமனுார் விலக்கு போலீசார் விசாரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X