பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்ட பள்ளிகளில்மதிப்பெண் சான்று வழங்கல்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் மாவட்ட பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டது.பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. மாவட்டத்தில் 29 ஆயிரத்து 30 பேர் எழுதினர். இதில் 25 ஆயிரத்து 61 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரி படிப்பிற்கு விண்ணப்பிக்க ஏதுவாக, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்2 முடித்த மாணவ, மாணவியருக்கு நேற்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்காக, மாணவ, மாண வியர் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு முகக்கவசம் அணிந்தபடி சென்றனர். அவர்களை சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளி தலைமை ஆசிரியர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X