பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் கோப்புகளை ஸ்கேன் செய்ய 'யூவி ஸ்டெர்லைட்' இயந்திரம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு தானியங்கி கிருமி நாசினி இயந்திரமும், யூவி ஸ்டெர்லைட் என்ற புதிய கருவியும் வைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்கவும், கிருமி நாசினி பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் புகார் மனு அளிக்க நேரில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், புகார் அளிப்பதற்காக வரும் பொதுமக்கள், அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் போடாமல் நேரடியாக அலுவலர்களிடம் வழங்குகின்றனர். அவர்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகத்திலும் மற்றும் டி.ஆர்.ஓ., உள்ளிட்ட மாவட்ட அலுவலர்கள் பணிபுரியும் அலுவலகத்திலும் 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட சென்சார் கிருமி நாசினி வழங்கும் இயந்திரம் நேற்று முன்தினம் பொருத்தப்பட்டது.அலுவலர்கள் அனைவரும் கண்டிப்பாக கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திய பிறகே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், சென்னையில் இருந்து 'யூவி ஸ்டெர்லைட்'எனும் 'அல்ட்ரா வயலேஷன்' கருவி கொண்டு வரப்பட்டுள்ளது. ஜெராக்ஸ் மிஷின் போல் உள்ள இந்த கருவியில், அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் கோப்புகளை வைத்து ஆன் செய்தால், 'யூவி' எனப்படும் கதிர்வீச்சு மூலம் கோப்புகளில் இருக்கும் வைரஸ் கிருமிகளை அழித்து விடும். அதன் பிறகே கலெக்டரின் கையொப்பத்திற்காக அந்த கோப்பு கொண்டு செல்லப்படுகிறது. இதே போன்று அனைத்து கோப்புகளும் ஸ்கேன் செய்த பிறகே பயன்படுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X