சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பினர் மோதல் 24 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த தென்கீரனுார் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் தினேஷ், 26; இவர், கடந்த 21ம் தேதி இரவு டிபன் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உ.கீரனுார் பகுதியைச் சேர்ந்த அஜய்குமார் தரப்பினர் தினேஷிடம் தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டினார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அஜய்குமார் தரப்பினர் தினேஷ் வீட்டிற்குச் சென்று குடிபோதையில் மீண்டும் தகராறு செய்து, ஆபாசமாக திட்டி தாக்கினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகார்களின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார், இரு தரப்பையும் சேர்ந்த அஜய்குமார், தீபக்குமார், ராஜீ, தினேஷ், பிரகாஷ், பாரதிராஜா, ஆறுமுகம், நவீன், ஆகாஷ் உட்பட 24 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X