சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் இன்றி சென்ற வாகனங்கள் 33 பேர் மீது வழக்குப் பதிவு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே மாவட்ட எல்லையை கடக்க எந்தவித அனுமதியும் பெறாமல் வந்த 33 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட எல்லையைக் கடந்து செல்ல வாகனங்கள் இ- பாஸ் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்காக மாவட்ட எல்லைகளில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான உளுந்துார்பேட்டை அடுத்த மடப்பட்டு அருகே உள்ள செக்போஸ்ட்டில், விழுப்புரம் மாவட்டம் எல்லையைக் கடந்து வரும் வாகனங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.ஆனால், பெரும்பாலான நேரங்களில் வாகனங்களை எந்தவித சோதனையும் இன்றி அனுப்பியதால் ஏராளமான வாகனங்கள் இ-பாஸ் இன்றி மாவட்ட எல்லையை கடந்து வந்த வண்ணம் இருந்தன.இந்நிலையில் ஏ.டி.எஸ்.பி., சங்கர், திருநாவலுார் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் நேற்று மதியம் மடப்பட்டு செக்போஸ்ட்டில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையில், இ-பாஸ் இன்றி மாவட்டத்தைக் கடக்க முயன்ற 33 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மூவர் காயம்சோதனையின் போது, விழுப்புரத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி பைக்கில் மனைவி, குழந்தையுடன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். மடப்பட்டு செக்போஸ்ட் அருகே வந்தபோது போலீசாரின் வாகன சோதனையை செய்வதைப் பார்த்ததும் பைக்கில் வந்தபடியே, குழந்தைக்கு முகக் கவசம் அணிவித்தபோது, நிலை தடுமாறி பைக் கவிழ்ந்தது. இதில் மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.உடன், செக் போஸ்ட்டில் இருந்த போலீசார் காயமடைந்தவர்களை விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X