சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை தாக்கியவர் கைது

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

அவலுார்பேட்டை; வளத்தி அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வளத்தி அடுத்த மேல்காரணி கிராமத்தை சேர்ந்த மணி மகன் அன்பரசன், 27. இவரது தாயாருக்கு சொந்தமான 1 சவரன் நகை காணாமல் போனது. அதே ஊரை சேர்ந்த முருகன்,30 என்பவர் மீது, அன்பரசனுக்கு சந்தேகம் இருந்தது.இதனால், 21 ம்தேதி அன்பரசன்,நண்பர் ரமேஷ் ஆகியோர் வளத்தி காவல் நிலையத்திற்கு போகலாம் என கூறி ஆர்க்காம்பூண்டி ஏரியிலுள்ள தைல தோப்பில், முருகனை அழைத்து வந்து குச்சியால் உடல் முழுவதும் அடித்து, ஆபாசமாக திட்டி, மிரட்டியுள்ளனர்.இது குறித்த முருகனின் புகாரின் பேரில் வளத்தி போலீசார் ரமேஷ் , அன்பரசன் மீது வழக்கு பதிந்து அன்பரசனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X