சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டின் நம்பரில் முறைகேடுதந்தை, மகன் மீது வழக்கு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

விழுப்புரம்; டின் நம்பரை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்த தந்தை, மகன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த பெரியசெவலையை சேர்ந்தவர் கோபால், 60; மரவேலைகள் சம்மந்தப்பட்ட தொழில் செய்து வருகின்றார். இதற்காக, திருக்கோவிலுார் வணிக வரி அலுவலகத்தில் கடந்த 2014ம் ஆண்டு பதிவு செய்து, தொழில் செய்து வருகின்றார்.இந்நிலையில், திருவெண்ணெய்நல்லுார் அணைக்கட்டு சாலையை சேர்ந்த நாராயணன், அவரது மகன் கிருஷ்ணன் ஆகியோர் கோபாலின் டின் நம்பரை மரவேலைக்கு தேவையான ரூ.14.50 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் வாங்க கடந்த 2015 முதல் 2017 ம் ஆண்டு வரை பயன்படுத்தியுள்ளனர்.இதையடுத்து, திருக்கோவிலுார் வணிக வரி அலுவலகத்தில் இருந்து, நாராயணன், கிருஷ்ணன் வாங்கிய இயந்திரங்களுக்காக விற்பனை வரியான ரூ.89,295 மற்றும் அதற்கான அபராத தொகையாக ரூ.1,33,942 செலுத்த கோபாலிற்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில், விற்பனை வரி செலுத்தாவிட்டால், பிணைய சொத்து மீது ஏல நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, தனது டின் நம்பரை தவறாக பயன்படுத்தி ஏமாற்றிய நாராயணன், கிருஷ்ணன் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கோபால் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், நாராயணன், கிருஷ்ணன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X