சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வு ஊழியர் வீட்டில் 32 சவரன் திருட்டு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பெரம்பலுார் : ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் வீட்டில், 32 சவரன் நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலுார், விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், வைத்திலிங்கம், 71; ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, வைத்திலிங்கம், தெருவின் குடிநீர் டேங்க் மின் மோட்டாரை நிறுத்தச் சென்றுள்ளார்.அப்போது, வீட்டின் உள்ளே படுத்திருந்த அவரது மனைவி வசந்தா, சத்தம் கேட்டு எழுந்து பார்த்துள்ளார். வீட்டின் உள் அறையில் இருந்து, இரண்டு பேர் வெளியே ஓடுவதை கண்டு, அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.அதற்குள், அவர்கள் தப்பி விட்டனர்.

உள் அறையில் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 32 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், 10 ஆயிரம் ரூபாய் பணத்தை, மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பதும், திருடர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்ததும் தெரிந்தது. விக்கிரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X