இந்தியா

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் கிரண்பேடி உரை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக, பட்ஜெட் தாக்கலுக்கு பின், கவர்னர் கிரண்பேடி நேற்று உரையாற்றினார்.

புதுச்சேரியில், ஒவ்வொரு ஆண்டும், கவர்னர் உரையுடன், பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவது வழக்கம். இதன்படி, கடந்த, 20 காலை, 9:30 மணிக்கு, கவர்னர் உரை நிகழ்த்துவார்; அன்று மதியம், 12:05 மணிக்கு, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, சட்டசபை செயலகம் அறிவித்து இருந்தது.ஆனால், 'பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைகள் குறித்த விபரங்களை, எனக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். வேறு தேதியில், கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கல் செய்யலாம்' என, கவர்னர் கிரண்பேடி தெரிவித்தார்.

இதற்கு, முதல்வர் ஒப்புக் கொள்ளவில்லை.திட்டமிட்டபடி, 20 காலை சட்டசபை கூடி, 2020 - 21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.இந்நிலையில், சட்டசபையில் உரையாற்ற வருமாறு, கவர்னருக்கு மீண்டும் அழைப்பு அனுப்பப்பட்டது. இந்த அழைப்பை அவர் ஏற்றார்.இதன்படி, கவர்னர் கிரண்பேடி நேற்று காலை, 9:30 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவருக்கு, போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மலர்செண்டு அளித்து, சபாநாயகர் சிவக்கொழுந்து வரவேற்று, சபைக்குள் அழைத்து சென்றார்.

தொடர்ந்து, சட்டசபையில் கிரண்பேடி உரையாற்றினார். கவர்னர் உரையில், அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கொள்கை முடிவுகள் இடம் பெற்று இருந்தன.காங்., புறக்கணிப்பு கவர்னர் கிரண் பேடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்., - எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி, கறுப்பு சட்டை அணிந்து, வந்திருந்தார். சபைக்குள் கவர்னர் வந்தவுடன், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அரசு கொறடா அனந்தராமன், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர், கவர்னர் உரையை புறக்கணித்து, சபையில் இருந்து வெளியேறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X