பொது செய்தி

தமிழ்நாடு

சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தொற்று கைதான எஸ்.ஐ.,க்கும் கொரோனா

Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்கும், சி.பி.ஐ., அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதாகியுள்ள, எஸ்.எஸ்.ஐ., பால்துரைக்கும் தொற்று உறுதியானது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ்,6௦; மகன் பெனிக்ஸ், 31 கொலை வழக்கில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட, 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் கடைசியாக, எஸ்.எஸ்.ஐ., பால்துரை, போலீஸ்காரர் தாமஸ் கைது செய்யப்பட்டனர். பால்துரைக்கு சர்க்கரை, தாமசுக்கு இதய நோய் உள்ளது.அறைக்கு, 'சீல்'சிறையில் அடைக்கப்படும் முன், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் போது, கொரோனா சோதனையும் நடந்தது.

நேற்று, அதன் முடிவுகள் வெளியாயின. இதில், பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, நேற்று காலை அவர், மதுரை கொரோனா சிறப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் இருந்தவர்கள், பயணித்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர் தங்கியிருந்த செல், சிறை வளாகத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இவ்வழக்கை, எட்டு பேர் அடங்கிய, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன், இவர்களில், இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகள் அஜய்குமார், பவனுக்கும் தொற்று உறுதியானது.

இதையடுத்து, மதுரை ஆத்திகுளத்தில், அவர்கள் தங்கியிருந்த அறைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான, போலீஸ்காரர் முருகன் ஜாமின் மனுவை, நேற்று முன்தினம், மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஜாமின் தள்ளுபடிமற்ற போலீஸ்காரர்களான, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஜாமின் மனுவை, நீதிபதி தாண்டவன் காணொலியில் நேற்று விசாரித்தார்.சி.பி.ஐ., தரப்பில், 'விசாரணை துவக்க நிலையில் உள்ளது. கைதாகி, 20 நாட்களுக்கு மேலாகிறது. ஜாமின் அனுமதித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. விசாரணையை பாதிக்கும்' என, ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜூலை-202011:49:42 IST Report Abuse
skv srinivasankrishnaveni கொலைகார எஸ் ஐ கள் கொரோனாவால் சாகவேகூடாது செய்த கொலைக்கு தண்டனையாக துடியா துடிச்சு சாவணும் பாவிகளா கொலை செய்யறதுக்கு எவண் அதிகாரம் தந்தானுக, கொரோனாவை செத்தால் செய்தபாவம் கழுவிடுமா போயிடுமா செத்தாளுக்கும் குடும்பம் குழந்தைகள் மனைவி மக்கள் இருக்குமில்லே போலீஸுலே வாங்கின சம்பளம் போறாது என்று எல்லாம் லஞ்சமா வாங்கியே வயரு வழக்கும் தொப்பையானி போலீசுகளே இறைவன் தரும் இந்தக்கொடி தண்டனைகளையும் அனுபவிக்கலெண்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X