பொது செய்தி

தமிழ்நாடு

மானிய விலையில் நெல் விதைகள்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கமுதி:கமுதி, அபிராமம் சுற்று பகுதியில் சில நாள்களாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் முன்கூட்டியே நெல், உளுந்து, பயறுகளை நிலங்களில் விதைக்க விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.

நெல் விதைப்பு பணிகளுக்காக, கமுதி வட்டார வேளாண் அலுவலகத்தில், கோ 51, என்.எல்.ஆர் 3447 ஆகிய சம்பா வகை நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் 17.75 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. 40 டன் நெல் இருப்பு உள்ளது. வம்பன் ரகமான 6, 8 வகை உருந்து, தரணி ரக நிலக்கடலை கம்பு விதைகள் அனைத்தும் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யபடுகிறது.

தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு, பட்டா சான்றிதழ்களுடன் விதைகளை பெற்று கொள்ளலாம் என, கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் கெர்சோன் தங்கராஜ், வேளாண் அலுவலர் விஜயபாண்டியன் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X