புதிய வாக்காளர் அட்டை வினியோகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய வாக்காளர் அட்டை வினியோகம்

Added : ஜூலை 25, 2020
Share

சிவகங்கை:மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புத்துார், மானாமதுரை தொகுதிகளில் 10 இலக்க எண்ணுடன் கூடிய புதிய வாக்காளர் அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 10 இலக்க எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.தேர்தல் கமிஷன் முதலில் 14 இலக்க எண்ணுள்ள அடையாள அட்டை வழங்கி இருந்தது. தற்போது நாடு முழுவதும் ஒரே விதமான வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைக்கும் பணி நடக்கிறது. முதலில் வழங்கிய அடையாள அட்டையில் மாநிலம், கோடு எண், தொகுதி வரிசை எண் அதற்குப்பின் வாக்காளரின் அடையாள அட்டை எண் என 14 இலக்கத்தில் இருந்தது.

தேர்தல் கமிஷன் தற்போது 10 இலக்க எண் கொண்ட புதிய அடையாள அட்டை வழங்கி வருகிறது. மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புத்துார், மானாமதுரை ஆகிய தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வாக்காளர் வீடு தோறும் சென்று வழங்கி வருகின்றனர்.

இது குறித்து வாக்காளரின் அலைபேசிக்கு குறுந்தகவலும் அனுப்புகின்றனர். காரைக்குடி தொகுதிக்கு மட்டும் இன்னும் புதிய வாக்காளர் அட்டை வினியோகம் செய்யவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X