பொது செய்தி

தமிழ்நாடு

ஆழ்கடலில் ஆபத்து நிறைந்த விஷ சேவல் மீன்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 ஆழ்கடலில் ஆபத்து நிறைந்த விஷ சேவல் மீன்

சாயல்குடி:மன்னார் வளைகுடா கடலில் அரியவகை மீனினங்கள் ஆயிரத்திற்கும் அதிகமான வகைகளில் தங்களது வாழ்விடமாக கொண்டுள்ளது. ஆபத்துக்கள் நிறைந்த விஷமீன்களும் வாழ்ந்து வருகின்றன.

அந்த வகையில், விஷ சேவல் மீன் உள்ளது. இதன் விலங்கியல் பெயர்'டிரோஸ் பிஷ்'. இந்த மீன் உடலில் அகன்ற இழைகளின் நிறங்கள் சேவல் போன்று விரிந்து காணப்படும். இதன் முட்களில் கொடிய விஷம் இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இதில் 12 இனங்கள் வரை கண்டறியப்பட்டுள்ளன.அதிகபட்சம் ஒரு அடி நீளம் வரை வளரும். சிவப்பு, வெள்ளை, பழுப்பு, கிரீம், கருப்பு வர்ணங்களில் உணர் இழைகள் அமைந்திருக்கும்.

அதிகபட்சம் 15 ஆண்டு கள் வரை உயிர் வாழும். அகன்ற இழைகளையும், நிறங்களையும் காட்டி தனது இணையையும், இரையையும் கவரும்.சேவல் போல இதர மீன்களிடம் எதிர்ப்பை காட்டி,தன் நிலப்பரப்பை தக்க வைத்துக்கொள்ளும். 50 வகையான சிறிய மீனினங்களை இரையாக உட்கொள்ளும். இதன் உடம்பில் 18 விஷ முட்கள் உள்ளது. அவற்றில் 13 முட்கள் முதுகில் காணப்படும். நஞ்சு சுறா, அஞ்சாளை, களவாய் மீன்கள்விஷ சேவல் மீன்களை இரையாக்கும்.

இதன் விஷ முட்கள் மனிதனை குத்தினால் குத்திய இடத்தில் கடும் வலி ஏற்படும்.சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளும். உரிய மருத்துவ சிகிச்சையின் மேற்கொள்ளப்படாவிடில் மரணம் ஏற்படும். இவ்வகை மீன்கள் மிகவும் அரிதாகவே மீனவர்களின் வலையில் சிக்கும். இதுகுறித்த விழிப்புணர்வினை மீனவர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X