கல்லலில் விரயமாகும் காவிரி நீர்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 கல்லலில் விரயமாகும் காவிரி நீர்

கல்லல்:கல்லலில் காவிரி கூட்டுகுடிநீர் குழாய் சேதமடைந்து, குடிநீர் விரயமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிவகங்கை மாவட்டத்தில் 779 ஊரக பகுதி, சிவகங்கை நகராட்சி, திருப்புத்துார், இளையான்குடி, நெற்குப்பை பேரூராட்சிகளுக்கு காவிரி குடிநீர் வினியோகம் நடக்கிறது. குடிநீர் நீரேற்று நிலைய மின் மோட்டார்கள், குடிநீர் எடுத்து வரும் குழாய்களை அவ்வப்போது பராமரிக்க வேண்டும்.

இதற்காக குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்பு பணிக்கு பல லட்ச ரூபாய் வரை டெண்டர் விடுகிறது. பழுது பார்ப்பதாக டெண்டர் எடுப்பவர்கள் முறையாக குழாய்களை பராமரிக் காமல் விட்டுவிடுகின்றனர். இதனால், குடிநீர் எடுத்து செல்லும் குழாய்கள் சேதமுற்று காவிரி குடிநீர் விரயமாகி வருகிறது. அந்த வகையில் கல்லல் தெப்பக்குளம் அருகே காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் விரயமாகி வருகிறது. இவற்றை செப்பனிட குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X