அமெரிக்க தூதரகத்தை மூடியது சீனா; பதிலடி நடவடிக்கையால் பரபரப்பு

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

பீஜிங்;அமெரிக்காவில், சீன துாதரகம் மூடப்பட்டதற்கு பதிலடியாக, சீனாவின் செங்டு நகரில் செயல்படும் அமெரிக்க துாதரகத்தை மூட, சீனா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.latest tamil newsகொரோனா பிரச்னையில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் எழுந்தது. 'கொரோனா பரவுவது குறித்த அபாயத்தை, சீனா, முன்கூட்டியே தெரிவிக்கவில்லை' என, அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்கு சீனா மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, அந்த அமைப்புக்கு அளித்து வந்த நிதி உதவியையும் ரத்து செய்தது.

இந்த மோதலின் உச்சக் கட்டமாக, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல்பட்டு வந்த, சீன துாதரக அலுவலகத்தை மூடும்படி, சமீபத்தில் அமெரிக்கா உத்தரவு பிறப்பித்தது; அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, சர்வதேச நாடுகளிடையே அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது.

'அமெரிக்க மக்களின் அறிவுசார் சொத்துரிமை, தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கத்துடன், சீன துாதரக அலுவலகங்களும், அதில் உள்ளவர்களும் செயல்படுகின்றனர்.ஹூஸ்டனை தொடர்ந்து, மேலும் பல சீன துாதரகங்கள் மூடப்படும்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடியாக, சீன வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:சீனாவின் செங்டு நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க துாதரகத்தின் கிளை அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதி, திரும்ப பெறப்படுகிறது. உடனடியாக அந்த அலுவலகத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல், அமெரிக்க துாதரக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsசீன - அமெரிக்க உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த, சீன துாதரக அலுவலகம் மூடப்பட்டுள்ளது; இது, சர்வதேச துாதரக விதிமுறைகளை மீறிய செயல். அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கைக்கு, பதில் அளிக்க வேண்டிய கடமை, எங்களுக்கு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமடைவதற்கு, அமெரிக்காவே முழுமையான காரணம்.அமெரிக்கா, உடனடியாக தன் தவறுகளை திருத்தி, இரு தரப்பு உறவு மேம்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
25-ஜூலை-202008:47:35 IST Report Abuse
Chandramoulli இரண்டு நாடுகளும் முரண்டு பிடிப்பதை பாத்தால் மூன்றாம் உலக போருக்கு செல்வதை போல் உள்ளது. மூன்றாம் உலக போர் வந்தால் அதிகம் பாதிக்க போவது சீனாவை சுற்றியுள்ள நாடுகள் தான்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
25-ஜூலை-202008:36:02 IST Report Abuse
blocked user அமெரிக்கா சொல்வது போல சீனா உளவு பார்த்ததாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழத்தில் பட்டம் வாங்கிய ஒரு முன்னாள் சீனக்குடிமகன் லிங்கிடின் தளத்தின் மூலம் அமெரிக்க இராணுவப்பணியில் இருப்போரை வெகுமதி கொடுத்து கட்டுரை எழுதவைத்து அந்தத்தகவல்களை சீன அரசுக்கு வழங்கியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
25-ஜூலை-202004:34:58 IST Report Abuse
NicoleThomson சீனாவிற்கு கடிவாளம் போடா எந்த நாடும் முன்வராதது அதன் மீதுள்ள பயத்தினாலா ? இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் என்று எல்லாரும் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்?
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25-ஜூலை-202007:30:47 IST Report Abuse
Sanny It's not a easy matter to disconnect with any countries foreign affairs. Can you chuck your mobile or computer immediately?, because it's have Chinese spare parts....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X