பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க விதிகளை மீறுவோர் மீது வழக்கு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொரோனா பரவல்அதிகரித்து வரும் நிலையில், அரசின் உத்தரவுகளைஅலட்சியப்படுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும், என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பரமக்குடியில் மட்டும் 300 க்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடை, தெருக்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், கண்ட இடத்தில் எச்சில் துப்புவோர், பொது இடங்களில் மது அருந்துவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என இன்ஸ்பெக்டர்அமுதா தெரிவித்தார்.

சமூக இடைவெளியைகடைப்பிடிக்காத இரண்டு கடை உரிமையாளர்கள் மீதுவழக்கு பதியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் முகக்கவசம் அணியாதவர்களை கண்டறிந்து நகராட்சி மூலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X