பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகை டீ

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 கொரோனா நோய் எதிர்ப்பு  சக்தி தரும் மூலிகை டீ

சிவகங்கை:சிவகங்கையில், கொரோனா வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை தரும் மரபுவழி மூலிகை டீ கடை செயல்பட்டு வருகிறது.

சிவகங்கை - மதுரை ரோடு காளவாசலை சேர்ந்த இயற்கை மூலிகை ஆர்வலர் முருகன். மரபுவழி மூலிகை டீ கடையை நடத்தி வருகிறார். இவர் தயாரிக்கும் மூலிகை டீ, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

இது குறித்து முருகன் கூறியதாவது, நத்தைச்சூரி, ஆவாரை, கற்பூரவள்ளி, ஆடாதோடை, துாதுவளை, நொச்சி, கற்றாழை, வேம்பு, நெறிஞ்சி ஆகிய மூலிகைகளை கொண்டு மூலிகை டீ தயாரிக்கிறேன். கசப்பு சுவை நிறந்திருப்பதால், எளிதாக பருக ஏதுவாக டீயுடன் நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி வழங்கப்படும்.

இது மட்டுமின்றி முளைகட்டிய சிறு தானியம், பாரம்பரிய அரிசி பனியாரம் வழங்கப்படும். இங்கு வருவோர் டீ அருந்தும் நேரத்திற்குள் மூலிகை சார்ந்த புத்தகங்களும் இலவசமாக வாசித்து செல்லலாம். டீ, சிறு தானியம், பனியாரம் ஒவ்வொன்றின் விலை ரூ.10 மட்டுமே. தினமும் காலை 6:00 முதல் 11:00 மணி வரை மட்டுமே பருகலாம், என்றார். மூலிகை டீ பருக 84897 77140.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X