சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரகர் கொலையில் நால்வர் கைது

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

அம்பத்துார், :ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால், தரகரை வெட்டிக் கொன்ற வழக்கில், நால்வர் கைதாகினர்.சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை அடுத்த அத்திப்பட்டு, மேட்டு, 8வது குறுக்கு தெருவில் வசித்தவர் வீரமணி, 45; ரியல் எஸ்டேட் தரகர். கடந்த, 22 காலை, வீட்டருகே, மர்ம கும்பலால், சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரித்தனர். அதில், வெட்டிக் கொல்லப்பட்ட வீரமணி, அத்திப்பட்டு, வானகரம் சாலை, போரூர் கார்டன், 5வது குறுக்கு தெருவைச் சேர்ந்த லோகநாதனுடன், 42, சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார்.வீரமணி, சில மாதமாக தனியாக தொழில் செய்து வந்துள்ளார். இதனால், அவர்களுக்கு இடையே, தொழில் போட்டி ஏற்பட்டது. இதனால், லோகநாதன், வீரமணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.குன்றத்துார் அடுத்த தண்டலத்தை சேர்ந்த கூலிப்படையினர் சரவணன், 37, பெரம்பூரை சேர்ந்த பிரேம்குமார், 32, உட்பட சிலரை ஏற்பாடு செய்துள்ளார்.லோகநாதனின் கார் டிரைவர் தயாளன், கூலிப்படைக்கு வீரமணியை அடையாளம் காட்டினார். இதையடுத்து, அவர்கள், வீரமணியை வெட்டிக் கொன்றது, போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.தனிப்படை போலீசார், நேற்று அதிகாலை, லோகநாதன் உட்பட, நால்வரையும் கைது செய்தனர். வீரமணியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, மேலும், சிலரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X