பொது செய்தி

தமிழ்நாடு

வேகமாக தயாராகும் செங்காந்தள் பூங்கா

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

சென்னை, கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் செங்காந்தள் பூங்காவை, ஒரு மாதத்திற்குள் திறப்பதற்காக, தோட்டக்கலைத் துறை பணிகளை விரைவுப்படுத்தியுள்ளது.தோட்டக்கலைத் துறை வாயிலாக, சென்னை, தேனாம்பேட்டையில் செம்மொழி பூங்கா, மாதவரத்தில் செயல்விளக்க பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, பல்வேறு அரியவகை மரங்கள், மலர் செடிகள், மூலிகை செடிகள் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன. பொதுமக்களின் சுற்றுலா பயன்பாட்டிற்காக மட்டுமின்றி, தாவரவியல் படிக்கும் மாணவர்களின் பயிற்சி களமாகவும், இந்த பூங்காக்கள் உள்ளன. தற்போது, சென்னையில் மூன்றாவதாக, கோபாலபுரம், அவ்வை சண்முகம் சாலையில், செங்காந்தள் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான, 6.8 ஏக்கர் நிலத்தில், பிரமாண்டமாக இந்த பூங்கா தயாராகி வருகிறது. இதற்காக, 5 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.காடு போல இருந்த இடத்தில், மரங்களை அப்படியே அழகுப்படுத்தி, பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட அரியவகை மலர்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. நடைபாதை, யோகா மேடை, சிறுவர் விளையாட்டு திடல், நிரூற்று ஆகியவையும், இந்த பூங்காவில் அமையவுள்ளது. பூங்காவை ஏப்., 14, தமிழ் புத்தாண்டு நாளில் திறக்க அரசு திட்டமிடப்பட்டு இருந்தது. ஊரடங்கு காரணமாக, பணிகள் பாதிக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வு கிடைத்துள்ள நிலையில், தற்போது, 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. ஒரு மாதத்திற்குள், இந்த பூங்காவை திறப்பு விழாவிற்கு தயார்படுத்தும்படி, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.இதையடுத்து, இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. விரைவில் மின் கம்பங்கள், மின் விளக்குகள் உள்ளிட்டவை பொருத்தும் பணிகள் துவங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X