கொரோனா நோயாளிகள் மறியலால் பரபரப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மாங்காடு, மாங்காடு அருகே, அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், 300 படுக்கை வசதிகளுடன் கூடிய, கொரோனா வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, 160க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், உணவு, கழிப்பறை, குப்பை அகற்றுவது போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்று கூறி, தொற்றால் பாதிக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, பூந்தமல்லி- குன்றத்துார் சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் விரைந்து பேச்சு நடத்தினர். போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே, வார்டுக்கு செல்வதாக கூறி, தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் உறுதி அளித்த பின், சாலையில் இருந்து கலைந்து, மருத்துவமனை வளாகத்திற்குள் நோயாளிகள் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X