ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட 68 பேருக்கு, பூங்கொத்து வழங்கி, உற்சாக வரவேற்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட 68 பேருக்கு, பூங்கொத்து வழங்கி, உற்சாக வரவேற்பு

Added : ஜூலை 25, 2020
Share
சென்னை,: கொரோனாவில் இருந்து மீண்ட பெண், ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட, 68 பேருக்கு, பூங்கொத்து வழங்கி, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னை, தெற்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரிந்தவர் மகேஸ்வரி. இவர், ஜூன், 30ல், வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலக, தலைமையிடத்து இணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார்.அதற்கு முன், இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு,

சென்னை,: கொரோனாவில் இருந்து மீண்ட பெண், ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட, 68 பேருக்கு, பூங்கொத்து வழங்கி, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.சென்னை, தெற்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரிந்தவர் மகேஸ்வரி. இவர், ஜூன், 30ல், வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலக, தலைமையிடத்து இணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார்.அதற்கு முன், இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.பூரண குணமடைந்த அவர், நேற்று பணிக்கு திரும்பினார். அவரை போல, கொரோனாவில் இருந்து மீண்ட இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் என, 67 பேர், பணிக்கு திரும்பினர். இவர்களுக்கு, கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பூங்கொத்து கொடுத்து, உற்சாக வரவேற்பு அளித்தார். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X