கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ.,வீட்டை விலைக்கு வாங்க ரூ.68 கோடி: நீதிமன்றத்தில் செலுத்தியது தமிழக அரசு

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டிற்கான இழப்பீட்டு தொகை 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி, அரசுக்கு, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டதையடுத்து ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு.



latest tamil news



சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெ. வசித்த 'வேதா இல்லம்' உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இந்த வீட்டின் மதிப்பு 67.90 கோடி ரூபாய் என தீர்மானிப்பட்டது. ஜெ. வாரிசுதாரர்களான அவரது அண்ணன் மகள் தீபா அவரது சகோதரர் தீபக் ஆகியோர் ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news


வருமான வரித்துறை சார்பில் ஜெ. செலுத்த வேண்டிய வரி பாக்கி 36.87 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டை கையகப்படுத்துவதற்காக, வீட்டிற்கான இழப்பீட்டு தொகையான 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் அரசு செலுத்த வேண்டும் என, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரூ. 68 கோடியை செலுத்தியது தமிழக அரசு.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூலை-202016:52:19 IST Report Abuse
oce புரட்சி தலைவியின் முன்னாள் எடுப்பு சிக்கலில் மாட்டிய போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்தியதில் தவறில்லை. இனி எந்த கொம்பும் அதற்கு உரிமை கோரமுடியாது.
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
25-ஜூலை-202014:07:21 IST Report Abuse
LAX தற்போதைய தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.. & வாழ்த்துக்கள்.. 🙏🏽 👍🏽 இங்க சிலர் "இந்த வீடு தீபா & தீபக் க்கு தான் சொந்தம்" னு நீதிமன்றம் உத்தரவிட்டதா சொல்றாங்க.. அவங்கள்லாம் அந்த தீர்ப்பை சரியா படிக்கல னு நினைக்கிறேன்.. 'வீட்டின் ஒரு பகுதியை தமிழக அரசு நினைவு இல்லமா மாத்திக்கலாம்' னும் அந்த தீர்ப்பில் உள்ளது.. அப்படிதான் செய்திகளிலும் வெளியானது..
Rate this:
Cancel
25-ஜூலை-202012:33:07 IST Report Abuse
நக்கல் நீதிமன்றம் தீபா, தீபக்குக்குதான் இதில் உரிமை உள்ளது என்று சொன்ன பின்பும் இவர்கள் அந்த வீட்டை வாங்க முயற்சிக்கிறார்கள் என்றால் அந்த வீட்டில் ஏதோ பெரிய புதையலோ, மர்மமோ இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது... அந்த வீட்டிற்கு வாய் இருந்தால் பல கதைகள் சொல்லும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X