சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மத்திய அமைச்சருக்கு 'அல்வா' லாரி உரிமையாளர் சங்கம் நுாதனம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

வானகரம், :பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் உயர்ந்து வருகிறது. இதை கண்டிக்கும் விதமாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், மதுரவாயல், வானகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.25 நாட்கள்இப்போராட்டத்தின் போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து, மாதிரி பட்ஜெட் தயாரித்ததுடன், 'அல்வா' கிண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் தயாரித்த மாதிரி பட்ஜெட் மற்றும் அல்வாவை, தபால் மூலம், பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்தனர்.இதுகுறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யுவராஜ் கூறியதாவது:மத்திய அரசு, தொடர்ந்து, 25 நாட்களாக டீசல் விலையை உயர்த்தி வருகிறது. 100 கோடி மக்கள்இது, 100 கோடி மக்களின் பிரச்னை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, மக்களுக்கு அல்வா தருவது வழக்கம். அதுபோல், நாங்கள் மாதிரி பட்ஜெட் தயாரித்து, அல்வா உடன் சேர்த்து, பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு அனுப்ப உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X