ஆக்கிரமிப்பின் பிடியில் சேலையூர் ஏரி பொதுப்பணித்துறை பார்வை விழுமா?

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

தாம்பரம் ஆக்கிரமிப்புகளுடன், கழிவு நீரும் கலந்து, சேலையூர் ஏரி குட்டை போல் காட்சி அளிக்கிறது. இந்த ஏரி மீது, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பார்வை எப்போது விழும் என, சமூக ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.சென்னை, தாம்பரம் அடுத்த சேலையூரில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. மொத்தம், 125.22 ஏக்கர் பரப்பு உடைய இந்த ஏரியில், 45.32 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, நான்கு புறமும் குடியிருப்புகளாக மாறி விட்டன.மறுபுறம், சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல ஆண்டுகளாக ஏரியில் கலப்பதால், நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசுகிறது.கலங்கல் பகுதியில், குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை கொட்டி நாசப்படுத்தி வருகின்றனர்.கரையில் புதர் மண்டி உள்ளதால், சூதாட்டம் நடக்கும் இடமாகவும், 'குடி' மையமாகவும் மாறிவிட்டது.இந்த ஏரியின் இயல்பான போக்கு கால்வாய், சேலையூர் காவல் நிலையம் அருகில், தாம்பரம் - வேளச்சேரி சாலையின் குறுக்காக சென்று, செம்பாக்கம் ஏரிக்குச் செல்ல வேண்டும்.சேலையூர் காவல் நிலையம் அருகில் இருந்து, ௩௦ அடி துாரத்திற்கு மட்டுமே, இந்த போக்கு கால்வாய் உள்ளது.அங்குள்ள, இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை தாண்டிச் சென்று பார்த்தால், ஈஸ்வரி நகர் விரிவில், கால்வாய் இருந்த பகுதியில், 6 அடி அகல மழை நீர் கால்வாய் இருப்பதாக, பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இக்கால்வாயும், ௧௫௦ அடி துாரம் மட்டுமே செல்வதாகவும், ஈஸ்வரி நகர் விரிவு பகுதிக்கு அப்பால், கால்வாய் இருந்த தடமே தெரியாமல் போனதாகவும், அவர்கள் கூறுகின்றனர்.இதனால், மழை காலங்களில், ஏரிக்கு வரும் உபரி நீர், ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களால், சிட்லபாக்கத்திற்கு திருப்பி விடப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன.இப்பிரச்னை, இன்று வரை சரி செய்யப்படவில்லை.இந்நிலையில், 2018ல் பருவமழை பொய்த்ததால், நீர்நிலைகளை பாதுகாக்க, 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என, நலச்சங்கங்கள் முன்வர வேண்டும் என, நம் நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.தொடர்ந்து, 'எகோ சொசைட்டி ஆப் இந்தியா' என்ற, தன்னார்வ அமைப்பு, ஏரியை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டது.மொத்தம், 30 வாரங்களுக்கும் மேல், இப்பணி நடந்தது.ஆனால், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவோ, துார் வாரி ஆழப்படுத்தவோ, பொதுப்பணித்துறை முன்வரவில்லை.இதனால், ஏரி கழிவுநீர் குட்டைபோல் காட்சி அளிக்கும், அவலநிலை தொடர்கிறது.இந்த ஏரி முறையாக பராமரிக்கப்பட்டால், 2015 வெள்ளத்தில், சேலையூர் மற்றும் சிட்லபாக்கம் பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கியதை போல், வரும் காலங்களில் நடக்காமல் தடுப்பதுடன், சம்பந்தப்பட்ட பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X