பொது செய்தி

தமிழ்நாடு

மீன் வாங்க வருபவர்களுக்கு வலியுறுத்தல்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மெரினா, மெரினாவில், மீன் வாங்க கூடும் கூட்டத்தை தடுக்க, அணுகு சாலையில், வாகனங்கள் செல்ல தடை விதித்து, போலீஸ், மாநகராட்சியினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.சென்னை, மெரினா அணுகு சாலையில், 300க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்படுகின்றன. இங்கு, சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்து, வார இறுதி நாட்களில், மீன் வாங்க மக்கள் கூடுவது வழக்கம்.தற்போது, நோய் தொற்று பரவல் காரணமாக, ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால், மீன் பிரியர்கள், சனிக்கிழமை காலை முதல், அணுகு சாலையில் மீன்கள் வாங்க குவிந்து வருகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் யாரும், சமூக இடைவெளி பின்பற்றாததால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவியது.இது குறித்து, நம் நாளிதழில் சுட்டிக் காட்டப்பட்டது. தொடர்ந்து, மயிலாப்பூர் உதவி கமிஷனர் நெல்சன், மாநகராட்சி செயற்பொறியாளர் இனியன் ஆகியோர், நேற்று அங்கு ஆய்வு செய்து, அப்பகுதி மீன் வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினர்.இதன்படி, இன்று காலை முதல் மாலை வரை, அந்த சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை, கலங்கரை விளக்க கட்டடத்திற்கு பின்புறம் உள்ள, அணுகு சாலையில் நிறுத்த இடம் ஒதுக்கிஉள்ளனர்.மேலும், வாங்கிய மீன்களை வெட்டி, சுத்தப்படுத்த, மீன் கடைகளுக்கு பின்புறம் உள்ள மணல் பரப்பில், தற்காலிகமாக இன்று ஒரு நாள் மட்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதற்காக, கடைகளுக்கு பின்புறம், மணற்பரப்பில் இருந்த குப்பைகள், ஐஸ் பெட்டிகளை, மாநகராட்சியினர், நேற்று, ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு அகற்றி, சுத்தப்படுத்தினர்.மீனவர்கள் பிடித்து வரும் வலை மீன்களை விற்க, மணற்பரப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையால், ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க முடியும். மேலும், மீன் வாங்க வருபவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, போலீஸ் மற்றும் மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என, அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X