பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் பிறப்பு, இறப்பு பதிவுகள்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

சென்னை, : சுகாதார ஆய்வாளர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், பிறப்பு, இறப்பு பதிவுகள், இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.சென்னையில், பிறப்பு, இறப்பு நிகழ்வுகள், ஒரு வாரத்திற்குள், மாநகராட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த பணியை, முன்பு, சுகாதார அலுவலர்கள் செய்தனர்.முடக்கம்திருவான்மியூரில், போலி சான்றிதழ் வழங்கிய சம்பவத்தையடுத்து, சுகாதார ஆய்வாளர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டது.அதுவும், அந்தந்த வார்டு சுகாதார ஆய்வாளர்கள், மொபைல் போனில் வரும், ஓ.டி.பி., எண்ணை பதிவு செய்து, பிறப்பு, இறப்பு சான்றிதழை, இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தற்போது, சுகாதார ஆய்வாளர்கள், கொரோனா தடுப்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஆய்வாளர், இரண்டு வார்டு வீதம் பணி புரிகின்றனர். இதனால், பிறப்பு, இறப்பு பதிவேற்றும் பணி முடங்கி உள்ளது.நடவடிக்கைஇது குறித்து, சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது: கொரோனா பாதிப்புக்கு முன், தினமும் மண்டல அலுவலகம் சென்று, அன்றைய தினம் மருத்துவமனை மற்றும் மயானங்களில் இருந்து வரும் ஆவணங்களை சரி பார்த்து, பிறப்பு, இறப்பு சான்றிதழை இணையத்தில் பதிவேற்றுவோம். தற்போது, கொரோனா தடுப்பு சார்ந்த பணிகளை, இரவு வரை செய்ய வேண்டி உள்ளதால், மண்டல அலுவலகம் சென்று பதிவேற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது. பெரிய மருத்துவமனைகள் உள்ள வார்டில், தினமும், 30 - 80 பதிவுகள் வரை பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு முடியும் வரை, பிறப்பு, இறப்பு பதிவேற்றும் பணியை, மண்டலத்திற்கு ஒரு சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X