இறப்பு எண்ணிக்கையில் தேனாம்பேட்டை மண்டலம் முந்தியது.

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திருவொற்றியூர், :திருவொற்றியூர் மண்டலத்தில், இறந்தவர்களின் எண்ணிக்கை, 100ஐ எட்டிய நிலையில், சதவீதத்தில், தேனாம்பேட்டை மண்டலம் முந்தியது.சென்னையில், நேற்றுடன், 90 ஆயிரத்து, 900 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 75 ஆயிரத்து, 384 பேர் குணமடைந்தனர். தவிர, 13 ஆயிரத்து, 569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை, 1,947 ஆக உள்ளது.சமீபத்தில் விடுபட்ட இறப்புகள் சேர்க்கப்பட்டதன் மூலம், மண்டல வாரியான நிலவரமும் மாறியுள்ளது. அதன்படி, திருவொற்றியூரில், தொற்று பாதிக்கப்பட்ட, 3,356 பேரில், 100 பேர் இறந்துள்ளனர். இது, 2.98 சதவீதமாகும்.இதன் மூலம், சதவீத அடிப்படையில், முதலிடத்தில் இருந்த திருவொற்றியூர் மண்டலம், தற்போது, இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.முதலிடத்தில் தேனாம்பேட்டை உள்ளது. அங்கு, தொற்று பாதிக்கப்பட்ட, 9,677 பேரில், 297 பேர் இறந்துள்ளனர். இது, 3.01 சதவீதமாகவும், மாநகராட்சியில் முதலிடமாகவும் உள்ளது.தண்டையார்பேட்டை, 238; ராயபுரம், 246; திரு.வி.க., நகர், 199; அண்ணாநகர், 212; கோடம்பாக்கம், 209; அடையாறு, 109 என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X