பொது செய்தி

தமிழ்நாடு

மறுசுழற்சி ஆலை பணி கமிஷனர் நேரில் ஆய்வு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பெருங்குடி, நந்தம்பாக்கம், பெருங்குடியில், தாவரக்கழிவு மறுசுழற்சி செய்யும் ஆலைகள் அமைக்கும் பணிகளை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு, 3,200 டன் குப்பை சேகரமாகிறது. இதனை வீடுதோறும் சேகரிக்க, 19 ஆயிரத்து, 597 துாய்மைப் பணியாளர்கள் உள்ளனர்.தினமும் சேகரமாகும் தாவரக் கழிவுகளை கையாளும் வகையில், நந்தம்பாக்கம், பெருங்குடி, கொடுங்கையூர், சேத்துப்பட்டு, சவுகார்பேட்டை ஆகிய ஐந்து இடங்களில், ஆலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.இவற்றின் மூலம், தினமும், 500 டன் தாவரக் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படும்; 50 டன் இளநீர் மட்டைகளை மறு சுழற்சி செய்யும் வகையில், நந்தம்பாக்கம் குப்பை வளாகத்தில் ஆலை அமைக்கும் பணி நடக்கிறது.பெருங்குடி குப்பை கிடங்கில், 100 டன் தாவரக்கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அவை செப்டம்பர் இறுதியில் நிறைவடையும்.அவற்றை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X